தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது? - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - TRB will conduct Polytechnic Lecturer Exam

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

By

Published : Nov 3, 2021, 2:46 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (நவ.3) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிஆர்பி மையம் மூலம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் கணினி வாயிலாக நடைபெறும். தேர்வர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்படும்.

1,060 காலி பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 129 தேர்வு மையங்களுக்கு பதில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவுரையாளர் தேர்வானது நடைபெறும். நவம்பர் மாதத்தில் நெட் (NET), ஸ்லெட் (SLET) தேர்வு, எஸ்பிஐ தேர்வு நடைபெறுவதால் தேர்வர்கள் நலன் கருதி டிசம்பர் 8 ஆம் தேதி விரிவுரையாளர் தேர்வு நடைபெறும்.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்து அரசு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் நிலை குறித்தும் தெரிய வரும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்த 'ஜெய் பீம்' - இயக்குநர் தங்கர்பச்சான்

ABOUT THE AUTHOR

...view details