தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது” - அமைச்சர் டிஆர்பி ராஜா - Minister TRB Rajaa

Puzhal Lake: புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்றும், மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை எனவும் தொழில்துறை டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

TRB Raja about Puzhal lake damage issue
அமைச்சர் டிஆர்பி ராஜா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 2:03 PM IST

Updated : Dec 7, 2023, 4:54 PM IST

சென்னை:சென்னையின் நீர் ஆதாரங்களின் ஒன்றாக இருக்கும் புழல் ஏரியின் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால், ஏரிக்கு 8,000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து தற்போது அணைக்கான நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றில் புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் உள்ளதாக ஒரு செய்தி வெளியானது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

இந்த ஏரியின் முழு உயரம் 2,120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மி.கன அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7,090 மீட்டர் ஆகும். இன்றைய (07.12.2023) காலை 6 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3,012 மி.க. அடியாக உள்ளது.

மேலும் இன்று காலை 6 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5,500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளிக் காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு, கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-இன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை.மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி, மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரூ.4,000 கோடி என்ன ஆனது? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Last Updated : Dec 7, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details