தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, இன சான்றிதழை பதிவேற்ற அறிவுரை! - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இன சான்றிதழை பதிவேற்றவும்

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இன சான்றிதழ் மீண்டும் ஒருமுறை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

trb

By

Published : Nov 5, 2019, 7:40 AM IST

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டு அவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன.

காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டனர். அவர்களின் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதிவரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகளால் சாதி சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை. எனவே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட நபர்களில் இனச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமலிருந்தால் வரும் 6ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒரு முறை தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இந்த சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இசை ஆசிரியர்கள் நியமனம்; நவ., 2ஆம் தேதி ஆன்லைன் கலந்தாய்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details