ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி (இன்று) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! - www.trb.tn.nic.in
சென்னை: முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்முறையாக கம்ப்யூட்டர் மூலம் ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வினை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர். அவர்களுக்கான உத்தேச விடை குறிப்புகள் ஜூலை மாதம் 29ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் விடை குறிப்புகள் மீது ஆட்சேபணை தெரிவிக்க ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
மேலும் இந்தத் தேர்வு முடிவு மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 814 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் பணி அமர்த்தப்படவுள்ளனர். தற்போது இறுதியாக விடை குறிப்புகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.