தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை கம்ப்யூட்டர் மறுத்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை: முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் மறுத்தேர்விற்கான தேர்வர்களின் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

online test

By

Published : Jun 25, 2019, 7:32 PM IST

Updated : Jun 25, 2019, 10:24 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனத்திற்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 23ஆம் தேதி நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வின்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே, மறுத்தேர்வு நடைபெற உள்ள மூன்று மையங்களின் விபரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 27ஆம் தேதி மறுத்தேர்வு நடைபெற இருக்கிறது. மறுத்தேர்வு எழுதப்போகும் தேர்வர்களின் ஹால் டிக்கெட் அவர்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பிரிண்ட் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும். ஹால் டிக்கெட்டுடன் தவறாமல் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை, புகைப்படம் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் தேர்வு நடைபெறும் போது ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு நேரத்திற்கு சரியாக வருகை புரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jun 25, 2019, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details