சென்னை:பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணிக்கான தேர்வு விண்ணப்பங்கள், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்கள், அவர்களின் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 41 ஆயிரத்து 478 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 7.1.2024 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வானது, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.