சென்னை, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போது, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நல்ல முறையிலும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 13 ஆயிரத்து 637 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டு, 7 லட்சத்து 17 ஆயிரத்து 573 பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்ட முடிவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ, 30 ஆயிரத்து 120 பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.