ஐயப்பன்தாங்கல், குன்றத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் உள்ள பணிமனைகளிலிருந்து அதிமுக தொழிற்சங்கங்களை வைத்து குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். குறைந்த அளவு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி - பேருந்து நிலையம், அதிமுக தொழிற்சங்கம், கடும் அவதி
சென்னை : தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான பேருந்துகளே இயங்குவதால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
![போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10769376-thumbnail-3x2-che.jpg)
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி
வேலை நிறுத்தத்தை அறிந்த சிலர் கால தாமதத்தை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தனர். எப்போதும் அதிக அளவு பேருந்துகளால் நிரம்பி வழியும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இவ்வளவு காலமின்றி தேர்தல் வரும் சமயத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க:காத்திருப்பு பட்டியலில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்!