சென்னை:அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்துப் பணியாளர்களுக்கும் அவரவர் பணி பதிவேட்டில் வாரிசு நியமன விவரம் பதிவு செய்திருத்தல் வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசுப்போக்குவரத்துப் பணியாளர்கள் வாரிசு நியமன விவரத்தைப் பதிவு செய்ய உத்தரவு! - சென்னை
போக்குவரத்துப் பணியாளர்கள் பணிப்பதிவேட்டில் வாரிசு நியமன விவரம் பதிவு செய்திருத்தல் வேண்டும் எனப் போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
![அரசுப்போக்குவரத்துப் பணியாளர்கள் வாரிசு நியமன விவரத்தைப் பதிவு செய்ய உத்தரவு! போக்குவரத்து பணியாளர்கள் வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய வேண்டும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16767986-thumbnail-3x2-pokk.jpg)
இந்த சுற்றறிக்கையில், பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மருத்துவ அடையாள அட்டையில் வாரிசு நியமனப் பெயர்களை உரிய ஆதார் ஆவணங்களுடன் பதிவு செய்து, அதனுடைய நகல் திருமணச்சான்று, குழந்தைகளின் பிறப்புச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை கோரிக்கை மனுவுடன் இணைத்து, உரிய அலுவலரிடம் ஒப்புகைப் பெற வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த நகலை துணை மேலாளருக்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க:கோயில் நிதியில் முதியோர் இல்லங்கள் தொடங்குவது தொடர்பான வழக்கு: தலைமை நீதிபதிக்கு மனு அளிக்க அறிவுறுத்தல்