இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வர்த்தக மையத்தில் 476 நோயாளிகள் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 24 படுக்கைகள் அவசரத் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அம்பத்தூர் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டுவருகிறது. இந்த முகாம்களில் தற்போதுவரை 84 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு கரோனா பாரிசோதனை செய்யப்பட்டு, அதனடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மீனம்பாக்கம் கே.எம். ஜெயின் கல்லூரியில் முன்னெச்சரிக்கையாக போதிய வசதிகளுடன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
அங்குள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் அவர்களுக்கு தரமான, சத்தான உணவுகளும், மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பும் வரையில் அனைத்து மருத்துவ பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முகாம்களுக்கு இரண்டரை லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிருமி நாசினிகள் தினம்தோறும் தெளிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா அறிகுறி உள்ள ஏ பிரிவு (A - Systematic) நோயாளிகள் மத்திய, மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் வீட்லேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தொடர்ந்து வீடுகளியே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கண்காணித்திட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.