சென்னை:வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் மூன்று நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த அமைச்சர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் பேருந்து பயணிகளும் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.