சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்வதற்கான சேவையை அதிகப்படுத்தியுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற நடவடிக்கை - துணைவேந்தர் வேல்ராஜ்