தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு - எம்.ஆர்.விஜயபாஸ்கர் - ஆம்னி பேருந்துகளில் அதிகக்கட்டணம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அதிகக் கட்டணம் வசூலித்த ஆறு ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

transport minister vijayabaskar

By

Published : Oct 26, 2019, 2:45 AM IST

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அலுவலர்களுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்காவது ஆண்டாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன் தினம் மட்டும் சென்னையில் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

தொடர்ந்து பேசுகையில், வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் இரண்டு 2,56,000 பயணிகள் பயணித்துள்ளனர். ஆம்னி பேருந்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, இதனைக் கண்காணிக்க போக்குவரத்துத் துறை சார்பில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்த ஆறு பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details