சென்னை: ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்தவகையில், அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல பேருந்துகளில் இதற்காக முன்பதிவு செய்து ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு எவ்வளவு பயணிகள் பயணித்துள்ளனர் என்பது குறித்து போக்குவர கழக அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (நவ.09) நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2100 பேருந்துகளும், 634 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2734 பேருந்துகளில் 1,36,700 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை, 2,23,613 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர்' என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்:'தமிழகம் முழுவதும் 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்டநெரிசலை தவிர்க்கும் விதமாக, இன்று முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கபோக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், சிறப்பு ஏற்பாடாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களாக பின்வருமாறு;-
கோயம்பேடு பேருந்து நிலையம்:சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.