போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் - Transport department workers
![போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10799681-thumbnail-3x2-aaa.jpg)
14:38 February 27
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 3ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்து ஊழியர்கள் பிப்.25ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுபெற்றவுடன் உடனடியாக அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த வேலைநிறுத்தத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், இந்து மஸ்தூர் சபா உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியுதவியை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.