தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரம்: எந்தெந்த பகுதிகளில் பஸ் இயங்காது தெரியுமா? - ஈடிவி பாரத் தமிழ்

மாண்டஸ் புயல் (Mandous Cyclone) கரையைக் கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் அரசுப்பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரம் பேருந்து ரத்து
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரம் பேருந்து ரத்து

By

Published : Dec 9, 2022, 4:12 PM IST

Updated : Dec 9, 2022, 4:41 PM IST

சென்னை:மாண்டல் புயல் காரணமாக போக்குவரத்துத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாண்டஸ் புயல் (Mandous Cyclone) இன்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையைக் கடக்க உள்ளது. குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

மேலும் அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பிலிருந்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலானது கரையைக் கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்.? பாலச்சந்திரன் விளக்கம்

Last Updated : Dec 9, 2022, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details