தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகவிலைப்படி உயர்வை விரைவில் அமல்படுத்த வேண்டும் - சென்னையில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் பேரணி - போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள்

அகவிலைப்படி(DA) உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பாக பேரணி நடைபெற்றது.

transport corporation pensioners held a rally demanding the implementation of Dearness Allowance
அகவிலைப்படியை விரைவில் அமல்படுத்தக்கோரி போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் பேரணி நடத்தினர்

By

Published : Mar 15, 2023, 3:28 PM IST

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் பேரணி

சென்னை: அகவிலைப்படி(DA) உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து தலைமை செயலகம் வரை திட்டமிடப்பட்டிருந்த பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். அகவிலைப்படி(DA) உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பேரணியின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நாம் தமிழர் கட்சி, தேமுதிக போன்ற அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அகவிலைப்படி(DA) நிறுத்தப்பட்டுள்ளது. அதற்காக கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2021ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் திமுக ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றம் சென்ற ஓய்வூதியர்களின் மனுவிற்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அரசு மேல்முறையீடு செய்யாது என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரணியின் போது நம்மிடையே பேசிய அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் காதர் மொய்தீன், "நாங்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். எல்லா துறைக்கும் இந்த அரசு அகவிலைப்படி(DA) கொடுத்து கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் அகவிலைப்படி(DA) நிறுத்தப்பட்டது. தற்போது உள்ள முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி(DA) வழங்கப்படும் என கூறினார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகியும் இன்னும் அகவிலைப்படி வழங்கவும் இல்லை, உயர்த்தவும் இல்லை. நாங்கள் ஓய்வூதியமாக வெறும் ரூ.5000, ரூ.6000 மட்டுமே பெறுகிறோம். இந்த பணத்தில் தான் அனைத்தையும் நாங்கள் பார்த்து கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டையும் எங்களுக்கு வழங்கவில்லை. சாதாரண குடிமக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளது. எங்களுக்கு அதுவும் கூட இல்லை.

கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை கொடுத்தால் எங்கள் வாழ்வாதாரம் பெருகும். அதற்காக தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். அகவிலைப்படியை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வேலை பார்க்கும் காலத்தில் எந்தவொரு நிகழ்வுக்கும் போகாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். ஓய்வு பெற்ற காலத்திலும் நாங்கள் இப்படி போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் ஆடம்பரத்திற்கு கேட்கவில்லை, பசிக்கு கேட்டு வந்திருக்கிறோம். எங்களுக்கு தர வேண்டியதை முறைப்படி கொடுங்கள். எங்களுக்கு உங்களுடைய கருணை வேண்டும். விரைவில் இதற்கான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

இதையும் படிங்க: அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்.. திருச்சி திமுகவில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details