தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை புத்தக காட்சி: வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு - 46th International Book Fair 2023

சென்னையில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கவுள்ள 46ஆவது சர்வதேச புத்தக காட்சியில், திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச புத்தக கண்காட்சி: திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு!
சர்வதேச புத்தக கண்காட்சி: திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு!

By

Published : Dec 26, 2022, 4:06 PM IST

Updated : Dec 26, 2022, 5:00 PM IST

சென்னை: தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக 46ஆவது சென்னை சர்வதேச புத்தக காட்சியானது ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பான பபாசி நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்திதனர்.

அப்போது பேசிய அவர், "18 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளான ஜனவரி 6ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த புத்தக கண்காட்சியானது நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 800-க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தக வாசகர்களுக்காக இந்த முறை, கடந்த ஆண்டினைக் காட்டிலும், சிறப்பாக நடைபெற உள்ளது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவான ஜனவரி 6ஆம் தேதி 2023ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

மேலும் 1500 அரங்குகள் இதுவரை வந்துள்ளதாகவும், இடவசதி குறைவாக உள்ளதால் 800 அரங்குகள் அமைக்கப்படுவதோடு, மினி ரேக் சிஸ்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, கூடுதல் சிறப்பாக வாசகர்களுக்கு ஏற்றவாறு திருப்தியாக இந்த புத்தக கண்காட்சி இருக்கும்.

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்படி வாசகர்கள் பாதுகாப்புக்கருதி, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். கண்காட்சியின்போது ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கான சிறப்புப்போட்டிகள் உள்ளிட்டவை குறித்து அடுத்த சில நாட்களில் விரிவாக அறிவிக்கப்படும். மேலும், புத்தகப் பூங்கா அமைக்க இடம் தர வேண்டி தமிழ்நாடு அரசிற்கு இந்த நேரத்தில் கோரிக்கை வைக்கிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Dec 26, 2022, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details