தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3ஆம் பாலினத்தவருக்கு சலுகை - தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc

By

Published : Sep 17, 2019, 9:16 AM IST

மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் எனக் கோரி கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகே மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதால், சுய அடையாளத்தின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, சுய அடையாளம் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கினால், திருநங்கைகளுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து, விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details