‘மிஸ் கிராண்ட் ஸ்டார் இன்டர்நேஷனல்’ எனப்படும் திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 முதல் 14 வரை நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 30 திருநங்கைகள் பங்கேற்பார்கள். அதில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நமீதா இன்று ஸ்பெயின் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய நமீதா, இதுவரை இந்தியாவிலிருந்து எந்த திருநங்கையும் பங்கேற்காத சர்வதேசப் போட்டியில் தான் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும், இனி வருடாவருடம் இந்தியா சார்பில் திருநங்கைகள் பங்கேற்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.