சென்னை, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கோயில் தெருவில், மாநகராட்சி, சகோதரன் திருநங்கைகள் அமைப்பு சார்பில் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது திருநங்கைகள் கரோனா விழிப்புணர்வு வாசகங்களோடு நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்திட சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கை கழுவுதல், கபசுரக் குடிநீர் குடித்தல் போன்ற வாசகங்கள் அடங்கி பேட்ஜ் அணிந்திருந்தனர். இதில் தேசிய அளவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற திருநங்கைகள், சகோதரன் திருநங்கைகள் அமைப்பின் திட்ட இயக்குநர் ஜெயா, தோழி திருநங்கைகள் அமைப்பின் திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.