சென்னை பூந்தமல்லியை அடுத்து உள்ள காட்டுப்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் திருநங்கை ஸ்ரீஜா. இவர், சட்டபூர்வமாக ஐந்து வயது ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இவருக்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கோகுல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஓர் ஆண்டு கழிந்த நிலையில், கோகுல் திருமணமானவர் என்பதும், அவருக்கு குழந்தை ஒன்று உள்ளது என்பதும் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கோகுல் அவருடைய செல்ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீஜா, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோகுல் மீது, தன்னை ஏமாற்றி விட்டதாகப் புகார் அளித்தார்
மேலும், அவர் இதுவரை எந்த பணமோ, நகையோ கோகுலிடம் கேட்டதில்லை. அவரைக் காதலிப்பதாகக் கூறி அவர் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு, அவரது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த திருநங்கை சட்டப்பூர்வமாக தத்து எடுத்து வளர்த்து வரும் குழந்தையின் மனதிலும் ஆசையை வளர்த்துவிட்டதாகவும், அவர் ஏமாந்ததுபோல வேறு எந்த திருநங்கையும் வருங்காலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் - பெற்றோர் புகார்!