சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் நேற்று முன்தினம் (மே 19) இரவு 9 மணியளவில், திடீரென்று ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தள்ளனர். அப்போது அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் ஒன்று பட்டாசு போல வெடிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரத்தைக் கடந்தும் வெடித்துக் கொண்டே இருந்ததுள்ளது.
இதனால் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்து, மின்சார வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் முன்னெச்சரிக்கையாக அந்தத் தெரு மக்களே தங்கள் வீட்டில் உள்ள மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். அதன்பின் மின்சார வாரிய ஊழியர்கள் வந்த பின்பும் தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.