சென்னை:அபிராமபுரம் பீமண்ணா கார்டனில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்தப் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் இன்று (டிசம்பர் 18) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் டிரான்ஸ்பார்மர் முழுவதுமாகப் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனால் டிரான்ஸ்பார்மர் அருகே இருந்த குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். பின்னர் இது குறித்து மின்வாரிய அலுவலர்களுக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடரந்து மின்வாரிய ஊழியர்கள் மின் இனைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.