சென்னை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துவருபவர் ஜெயபால். சிறந்த முறையில் பணியாற்றிவரும் இவரை பள்ளி தலைமையாசிரியர் எப்ரேம், கண்டபடி வசைபாடியதாகப் புகார் எழுந்தது.
இது குறித்து பார்வை மாற்றுத்திறனாளி முதுகலைப் பட்டதாரியான ஜெயபால் புகார் அளித்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலையில் நேரடியாக விசாரணை செய்யப்பட்டது.