தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் - Transfer of Tamil Nadu Police IPS CADRES

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IPS Transfer -Tamil Nadu Police IGs and DIGs.
IPS Transfer -Tamil Nadu Police IGs and DIGs.

By

Published : May 14, 2021, 9:59 PM IST

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி காவல் துறைத் தலைவராக இருந்த டி.எஸ். அன்பு; மதுரை தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சிராப்பள்ளி காவல் துறைத் தலைவராக இருந்த தீபக் தாமோர், கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Transfer of Tamil Nadu Police IGs and DIGs

அதேபோல், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாகவும்; ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐஜியாக பவானீஸ்வரியும்; ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக பிரவீன் குமார் அபினாப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

ABOUT THE AUTHOR

...view details