தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பணியாற்றிய ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

tn govt
tn govt

By

Published : Nov 30, 2019, 5:13 PM IST

இது தொடா்பாக தலைமைச் செயலர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட வருவதை அலுவலர் ரவிச்சந்திரன் உள்துறை துணை செயலராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வள்ளலார் ஆவின் மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் மேலாளராக இருந்த காமராஜ் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராகவும், போக்குவரத்து துறை ஆணையர் சமய மூர்த்தி கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையராகவும், கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையராக இருந்த ஜவஹர் போக்குவரத்து துறை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

உத்தமபாளையம் சப் கலெக்டர் வைத்திநாதன் பொள்ளாச்சி சப் கலெக்டராகவும், சேலம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சாந்தி, தமிழ்நாடு காதர் கிராம வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், தமிழ்நாடு மாக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கஜலக்ஷ்மி சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் கிரேஸ் லல்ரின்ட்கி சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் விஜயராணி தாட்கோ மேலாண்மை இயக்குநராகவும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புதிய தலைமைத் தகவல் ஆணையரான ராஜகோபால் ஐஏஎஸ் யார்?

ABOUT THE AUTHOR

...view details