தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - etv bharat

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

By

Published : Aug 16, 2021, 8:11 PM IST

Updated : Aug 16, 2021, 10:00 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் 7 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அவர்களின் விவரம் பின்வருமாறு:

1. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகித்துவரும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் மாற்றப்பட்டு, மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராணிப்பேட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட இரண்டு வாரத்திற்குள் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக பதவி வகித்து வரும் தீபா சத்யன் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டன்ட்டாக பதவி வகித்துவரும் இளங்கோ மாற்றப்பட்டு, ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. கடலோரப் பாதுகாப்புக் குழு (ராமநாதபுரம்) எஸ்.பி.யாக பதவி வகித்துவரும் ஜெயந்தி மாற்றப்பட்டு, அமலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. அமலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக பதவி வகித்துவரும் மகேஷ்குமார் மாற்றப்பட்டு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு - 2 (நிதி நிறுவனங்கள்) (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்துவரும் கல்பனா நாயக் மாற்றப்பட்டு, ரயில்வே (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்
  • இதேபோன்று ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறையில் 12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அவர்களின் விவரம் பின்வருமாறு:

1. சுமித்சரண் - சென்னை ஊர்க்காவல் படை ஐஜி

2. ஆர்.தினகரன் - சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி

3. ஏ.கயல்விழி - காவல் பயிற்சி பிரிவு டிஐஜி

4. வி.ஆர்.சீனிவாசன் - திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி

5. சி.விஜயகுமார் - திருவாரூர் மாவட்ட எஸ்.பி

6. சி.ரவாளி பிரியா - தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி

7. தேஷ்முக் சேகர் சஞ்சய் - ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி

8. ஓம் பிரகாஷ் மீனா - சென்னை சைபர் குற்றப்பிரிவு - எஸ்.பி

9. வி.விக்ரமன் - சென்னை சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவு எஸ்.பி

10. என்.தேவராணி - சென்னை சைபர் குற்றப்பிரிவு - எஸ்.பி

11. அருண் பாலகோபாலன் - சென்னை பரங்கிமலை துணை ஆணையர்

12. ஜி.ஷியாமளா தேவி - சென்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர்

  • இதேபோன்று ஜூன் 27ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறையில் 5 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அவர்களின் விவரம் பின்வருமாறு:

1. ஜெ.லோகநாதன் - சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர்

2. எம்.டி.கணேஷ் மூர்த்தி - சென்னை தலைமையிட ஐ.ஜி

3. எம்.ராஜராஜன் - காவலர் தேர்வு பள்ளி (தூத்துக்குடி) எஸ்.பி

4. டி.பி.சுரேஷ் குமார் - திருநெல்வேலி சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர்

5. எஸ்.செந்தில் - தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டன்ட்

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை

Last Updated : Aug 16, 2021, 10:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details