தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரி மனு! - Madras high Court

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காவல்துறை முன்னாள் அலுவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

Transfer CBI inquiry for sp harassment case, petition filed before MHC
Transfer CBI inquiry for sp harassment case, petition filed before MHC

By

Published : Mar 9, 2021, 9:32 PM IST

சென்னை: அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி, ஏற்கனவே வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற குற்றச்சாட்டில் தொடர்ந்து ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ.பி.எஸ். அதிகாரி மீதான புகாரை மாநில காவல்துறையான சிபிசிஐடி விசாரித்தால், அவர் மீது மென்மையான அணுகுமுறையை கையாள்வார்கள் என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து சிபிசிஐடி விசாரித்தால் முறையாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: சமோசாவிக்கு காசு கேட்டதால் துப்பாக்கிச் சூடு.. கடைக்காரர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details