இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தெற்கு ரயில்வே சார்பில் தினமும் சராசரியாக 1,305 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. அப்படி இயக்கப்படும் இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
ரயில் தாமதத்திற்கு காரணம் என்ன? - passengers using
சென்னை: ரயிலில் பயணிக்கும் பயணிகள் அடிக்கடி அவசர சங்கிலியை இழுப்பதால் ரயில்கள் தாமதம் ஆவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விரைவு ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை என பயணிகள் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதற்கு காரணம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அடிக்கடி அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துகின்றனர். இதனால்தான் ரயில் தாமதமாகின்றன.
மேலும் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இதுபோன்று 774 சம்பவங்கள் நிகழந்துள்ளன. இதற்காக பயணிகளிடம் இருந்து ரூ. 3.72 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணங்கள் இன்றி அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தால் ஆயிரம் ரூபாய் அபராதம், ஓராண்டு சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டும், இதுபோன்ற சம்பவங்களில் பயணிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.