சென்னை:அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது. திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், வங்கிக் கடனுதவி குறித்தும் விழிப்புணர்வு இன்று (டிசம்பர் 9) அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் (டிசம்பர் 10) நடைபெறுகிறது.
திருநங்கைகளுக்குப் பயிற்சி முகாம்: நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு - திருநங்கைகளின் நல்வாழ்வு
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வழங்கும் நலத்திட்டங்கள், வங்கிக் கடனுதவி ஆகியவை குறித்த 2 நாள் சிறப்புப் பயிற்சி முகாமை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியும், சமூகநலத் துறையும் இணைந்து நடத்திவருகின்றன.
திருநங்கைகளுக்குப் பயிற்சி முகாம் : நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மூன்றாம் பாலினத்தவர் தினமும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த முகாமை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியும் சமூகநலத் துறையும் இணைந்து நடத்திவருகின்றன. இத்தகைய முயற்சி, கண்டிப்பாக திருநங்கைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று முகாமில் கலந்துகொள்பவர்கள் தெரிவித்துவருகின்றனர்.