சென்னை:தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், ஆசிரியர்களுக்கு ஏழு கட்டங்களாக கலாசார பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் கலை மற்றும் கலாசார மையம் இணையவழியில் நடத்தவுள்ள இப்பயிற்சிக்கு ஆசிரியர் விபரங்களை அனுப்பிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.