தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்துவந்த மூன்று பேர் கைது!

சென்னை: ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்த மூன்று பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

robbers

By

Published : Nov 3, 2019, 9:26 AM IST

Updated : Nov 3, 2019, 12:48 PM IST

சென்னையில் சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தொடர்ந்து, தனியாக வரும் பயணிகளிடம் இருந்து செயின் பறிப்புகள் நடைபெருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில், ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய வடகோடியில், சந்தேகதிற்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ்(21) என்பதும், ரயில் பயணிகளிடம் தொடர்ந்து, பணம், தங்க நகைகள், செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துவந்ததும் தெரியவந்தது.

வழிப்பறி கொள்ளையன் ஆகாஷ்

இவரது கூட்டாளிகளான வினோத்(21), செல்வம்(21) ஆகியோரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஏழரை சவரன் நகைகளையும், 8 செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்த பின்னர் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

Last Updated : Nov 3, 2019, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details