சென்னை :கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில் முன்பதிவு செய்யும் மையங்கள் செயல்படும் நேரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ் தினத்தன்று கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை இயங்குவது போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.