சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலானது, பல்லாவரம் திரிசூலம் இடையே வந்தபோது அதில் பயணம் செய்துகொண்டிருந்த திரிசூலத்தைச் சேர்ந்த வினோத் (17) என்ற இளைஞர் ரயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழப்பு - பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பலி
சென்னை: தாம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

train accident in chennai pallavaram railway station
மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் வினோத்தின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு