ஆவடி அடுத்த பட்டாபிராம், பாலாஜி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர், இதே பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தார். விக்னேஷ் நண்பரை பார்க்க வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க அவர் முயன்றுள்ளார்.
ஓடும் ரயிலில் சிக்கி கல்லூரி மாணவன் பலி - ஈடிவி
ஆவடி அருக தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவன், ரயிலில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
கல்லூரி மாணவன் பலி
அப்போது, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அங்கு சென்ற ஆவடி ரயில்வே காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையும் படிங்க :தொடங்கியது யக்ஷா கலைத் திருவிழா
Last Updated : Mar 9, 2021, 5:29 PM IST