தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் பறித்துவிட்டு தப்பியோடிய கொள்ளையன்: மடக்கிப்பிடித்த எஸ்ஐ! - Chain snatched person arrest

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பெண்ணிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பியோடிய கொள்ளையனை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒப்படைத்தார்.

theft
theft

By

Published : Sep 7, 2020, 1:42 PM IST

சென்னை பல்லவன் சாலை காந்தி நகர் பகுதியில் வசித்துவருபவர் சந்தியா (20). இவர் செப். 5ஆம் தேதி இரவு அண்ணா நகர் தாராப்பூர் டவர் அருகே செல்போன் பேசியபடி பேருந்திற்காக நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென்று சந்தியாவின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் சந்தியா கூச்சலிட்டு கொண்டு ஓடி வரவே அருகில் பணியிலிருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், அந்தக் கொள்ளையனை மடக்கிப்பிடித்துள்ளார்.

பின்னர் தர்ம அடி கொடுத்து அந்தக் கொள்ளையனை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள்
பின்னர் காவல் துறையினர் இவரிடம் நடத்திய விசாரணையில், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சையத்யாசின் (28) என்பது தெரியவந்தது. இவர் இதேபோன்று பல்வேறு திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா சாலையில் உள்ள விலையுயர்ந்த வாகனத்தையும் திருடியது இவர்தான் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவரிடமிருந்து ஒரு செல்போன், கொள்ளையடித்த இரண்டு இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சையத் யாசின் மீது ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஒருமுறை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சையத் யாசினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details