சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நேற்று(டிச.31) மாலை முதல் சுமார் 16 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 368 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு இரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். அதிவேகமாக வாகனம் ஓட்டியது, சாகசத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் 572 இருசக்கர வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.