தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விதிமுறைகள் குறித்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு! - Traffic Rules Awareness Campaign

சென்னை: தண்டையார்பேட்டையில் போக்குவரத்து காவல் துறையினர் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு பரப்புரை  போக்குவரத்து காவல் துறையினர்  போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு பரப்புரை  Traffic Police  Traffic Rules Awareness Campaign  Traffic Rules Awareness Campaign in Thandayarpet
Traffic Rules Awareness Campaign

By

Published : Feb 6, 2021, 5:53 PM IST

Updated : Feb 6, 2021, 7:56 PM IST

சென்னை அடுத்த தண்டையார்பேட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் சாலை விதிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சாலை விதிகளை பின்பற்றவும், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டும் செல்லவும், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், நாம் பாதுகாப்புடன் இருந்துகொண்டு குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகளுக்கும் சாலை விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையடுத்து, கையில் பதாகைகளை ஏந்தி உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் போக்குவரத்து காவலர்கள்

இதையும் படிங்க:சாலை பாதுகாப்பு மாதம்: பாசகயிறுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

Last Updated : Feb 6, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details