சென்னை ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டில் தனியார் நிறுவனம் 400 வீடுகள் கொண்ட தொகுப்பு வீட்டைக் கட்டிவருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி இல்லாமல் இங்கு வீடு கட்டப்பட்டுவருவதாக டிராபிக் ராமசாமி புகார் தெரிவித்தார். இதற்காக அவர் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு மாநகர அமைப்பு அலுவலர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மாநகராட்சி ஊழியர்களுடன் டிராபிக் ராமசாமி வாக்குவாதம்! - Traffic Ramaswamy Arguments with Avadi Corporation Workers
சென்னை: ஆவடி மாநகராட்சியை டிராபிக் ராமசாமி முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Traffic Ramaswamy
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பருத்திப்பட்டு பகுதியில் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டிவருகின்றனர். இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துணைபோவதாகக் குற்றஞ்சாட்டினார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க:விதிகளை மீறி கட்டப்பட்ட வளைவுகளை நீக்குக -உயர் நீதிமன்றம் அதிரடி...