தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றம்: டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Traffic Ramasamy, Jayalalitha
Traffic Ramasamy, Jayalalitha

By

Published : Jul 2, 2020, 8:05 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி இருப்பதால், நினைவு இல்லமாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டுமென அரசுக்கு சமூகச் செயற்பட்டாளர் டிராபிக் ராமசாமி மனு அனுப்பியிருந்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் இதே கோரிக்கையுடன் கடந்த மாதம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த மனுதாரர் அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன் முறையான மனுவாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு டிராபிக் ராமசாமி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details