சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், வாகன நெரிசலின்றி போக்குவரத்து சீராக இருக்கவும், சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையினர், பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 22ஆம் தேதி, சென்னை பெருநகர் காவல் எல்லைக்குட்பட்ட 112 முக்கிய சந்திப்புகளில், எந்தவொரு வாகனமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வண்ணம் "ஜீரோ வைலேஷன்" பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.