சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனிடையே குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருவதாக புகார் எழுந்தது.
பொதுவாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையை செலுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர், நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று தருகின்றனர். இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இனி நீதிமன்றம் வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால், வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.