சென்னை, நீலாங்கரை போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன் (வயது 55). இவர் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர். இவர் கடந்த 17ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டு கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (செப்.28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் - அஞ்சலி செலுத்திய டிஜிபி - chennai latest news
கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் படத்திற்கு டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
![கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் - அஞ்சலி செலுத்திய டிஜிபி Traffic police inspector killed by Corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8983530-928-8983530-1601380706144.jpg)
Traffic police inspector killed by Corona
இந்நிலையில், இன்று (செப்.29) அவரது திருவுருவப் படத்திற்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அரசு பணியாளர்கள் வருகின்ற அக். 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!