தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு நேர ஊரடங்கு - பாதுகாப்பு பணியில் 10,000 காவல்துறையினர் - chennai lockdown

சென்னையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

முக்கிய மேம்பாலங்களை மூட போக்குவரத்து காவல்துறை தகவல்
முக்கிய மேம்பாலங்களை மூட போக்குவரத்து காவல்துறை தகவல்

By

Published : Apr 20, 2021, 7:42 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்று (ஏப்ரல் 20) இரவு பத்து மணி முதல், அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில், சென்னையில் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக, இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அளித்த உத்தரவின் பேரில் 200 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜாஜி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளை காவல்துறையினர் மூட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெரம்பூர் மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மூலக்கடை மேம்பாலம் உள்ளிட்ட சுமார் 40 மேம்பாலங்களை மூட போக்குவரத்து காவ்ல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விதிகளை மீறி சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!

ABOUT THE AUTHOR

...view details