தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம்: விதிகளை மீறிய 1,161 வாகனங்கள் மீது ஒரே நாளில் வழக்குப்பதிவு - Traffic police have registered case against 1161 vehicles

வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் 1161 வாகனங்கள் மீது ஒரே நாளில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விதிகளை மீறிய 1,161 வாகனங்கள் மீது ஒரே நாளில் வழக்குப்பதிவு traffic-police-have-registered-case-against-1161-vehicles-carrying-school-children-for-violating-traffic-rules பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம்
விதிகளை மீறிய 1,161 வாகனங்கள் மீது ஒரே நாளில் வழக்குப்பதிவுtraffic-police-have-registered-case-against-1161-vehicles-carrying-school-children-for-violating-traffic-rulesபள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம்

By

Published : Apr 2, 2022, 8:31 AM IST

சென்னை: வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் தீக்சித், பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஷ

மார்ச் 28 அன்று பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை நடத்திய விசாரணையில் வாகன ஓட்டுநருக்கு காதுகேட்காது என்னும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன விபத்துகளைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அடிப்படையில் குழந்தைகளைப் பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் பெற்றோர், தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது, போக்குவரத்து விதிகளை மீறி, வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்வது தெரியவந்துள்ளது.

பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம்

இது தொடர்பாகச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் (மார்ச் 28 முதல் 30 வரை) சென்னை பெருநகரம் முழுவதும் உள்ள 255 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

பள்ளி வாகனம்

இந்தச் சிறப்பு முகாமின் போது மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுமாறு பெற்றோருக்கு வலியுறுத்துமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் போக்குவரத்து விதிகளை மீறி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு. மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த தணிக்கையின்போது 1, 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பள்ளி நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி பேருந்துகளின் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012ஐ பின்பற்றி பள்ளி பேருந்துகளை எவ்வாறு இயக்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி வாகனம்

அனைத்து வாகன ஓட்டிகளும் பள்ளிக் குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து ஒழுக்கத்தை பின்பற்றுவதில் முன்னுதாரணமாகத் திகழுமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஓட்டுநருடைய குழந்தை புகைப்படத்தை பள்ளி பேருந்தில் வையுங்கள்... முதன்மைக் கல்வி அலுவலர்...

ABOUT THE AUTHOR

...view details