சென்னை:நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையிலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வழியில் பார்க் ஓட்டல் அருகே எம்ஜிஆர் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்புவதற்கு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜன 22) வடபழனி போலீசார் ரோந்து வாகனம் அனுமதி மறுக்கப்பட்ட சாலையில் வலதுபுறம் திரும்பி சென்றுள்ளது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் புகைப்படத்துடன் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் போலீஸ் வாகனத்திற்கே அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் - போலீஸ் ரோந்து வாகனம்
நுங்கம்பாக்கம் அருகே அனுமதி மறுக்கப்பட்ட சாலையில் சென்ற ரோந்து வாகனத்திற்கு, போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
போலீஸ் வாகனத்திற்கே அபராதம்
புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார், வாகனத்தை ஓட்டி சென்ற காவலருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அபராதம் விதிக்கப்பட்ட ரசீதை புகார் அளித்தவர் பார்வைக்கு ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் கைது