தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரைவில் சென்னையை ஸ்தம்பிக்கும் போராட்டம்' - தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு உரிய பணப் பலன்களை அளிக்க அரசு தாமதிக்குமானால் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கர்சன் தெரிவித்துள்ளார்.

கர்சன்

By

Published : Jun 11, 2019, 2:11 PM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் ஆறாவது ஆண்டு பேரவைக் கூட்டம் மதுரை மண்டலத்தில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கர்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரவேண்டிய பணப்பலன்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

அவ்வப்போது நடத்திய சில போராட்டங்களின் விளைவாக சிலருக்கு பணப் பலன்களை வழங்கினாலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படியோ ஓய்வூதியப் பலன்களோ வழங்கப்படவில்லை.

கர்சன்
தமிழ்நாடு அரசு ஜூலை மாதத்திற்குள் இதனை வழங்க தவறுமானால் சென்னை மாநகரமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப் பெரும் போராட்டத்தை மேற்கொள்வோம். இது குறித்து ஆகஸ்ட் 13, 14ஆம் தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் அறிவிப்பு செய்வோம். இதனை தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு எச்சரிக்கையாகவே நாங்கள் தெரிவிக்கிறோம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details