தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவழிப் பாதையான அண்ணாசாலை - சோதனை ஓட்டம் தொடக்கம்..! - சோதனை ஓட்டம்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த அண்ணாசாலையை மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றும் வகையில் சோதனை ஓட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

anna-salai-chennai

By

Published : Sep 11, 2019, 11:18 AM IST

Updated : Sep 11, 2019, 3:23 PM IST

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த அண்ணாசாலை மீண்டும் இரு வழிப்பாதையாக திறக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் சோதனை ஓட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த நிலையில் அண்ணாசாலை ஜி.பி. சாலை முதல் அண்ணாசாலை ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த நாட்களில் அனைத்து வாகன ஒட்டிகளும் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஜி.பி. சாலையில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது.
  • வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து இராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.
  • ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோடில் அனுமதிக்கப்படுகிறது.
  • அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

இது போன்ற பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அண்ணாசாலை - சோதனை ஓட்டம்
Last Updated : Sep 11, 2019, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details