சென்னை:பழைய பல்லாவரம், மலங்கானந்தபுரம் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் சேரும் சகதியுமாய் காணப்படுகிறது. இதனால், சாலையில் நடுவே இரும்பு தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையின் ஒரு வழியில் மட்டும் வாகனங்கள் செல்லும் வகையில் உள்ளது. எதிர் திசையில் இருசக்கர வாகனம் மட்டும் வருவதற்கே வழி உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.